வியாழன், செப்டம்பர் 15, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَن لَّا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

60:13. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் யாரை கோபித்து விட்டானோ அந்தக் கூட்டத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! (ஏக இறைவனை) மறுப்போர் மண்ணறைவாசிகள் (எழுப்பப்படுவார்கள் என்பது) பற்றி நம்பிக்கை இழந்தது போல் இவர்கள் மறுமையைப்1 பற்றி நம்பிக்கை இழந்து விட்டார்கள்.



திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே விபச்சார அழகிகள் நடமாட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....



ஒரு காலத்தில் ஊரின் ஒதுங்குப் புறத்தில் மையிருளில் நடந்து வந்த விபச்சாரம் இன்று உலகின் மையப்பகுதிகளுக்கு சுடர் விடும் சூரிய ஒளியில் பகிரங்கமாக நடக்கும் காலம் வந்து விட்டது, இது மேலும் பல்கிப் பெருகி பிரசித்திப் பெற்ற தேவஸ்தானங்களின் அருகிலும் நெருங்கி விட்டது.

சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே விபச்சார அழகிகள் நடமாட்டம் என்று மேல்படி தகவலை ஊடகச் செய்தியின் வாயிலாக அறிந்தோம்.

மேற்கானும் தகவலை அறிந்த பக்த கோடிகள் புள்ளி விபரங்களுடன் தகவல் அளித்த எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்து தகவலை திரும்பப் பெற வைத்துள்ளனர்.

இந்தியாவின் முக்கிய நகரங்களின் மையப்பகுதிகளில் போர்டு வைத்து விபச்சாரம் நடத்தும் செய்தி அறிந்து கொதித்தெழாத பக்தகோடிகள் ஏழுமலையான் கோயில் அருகே மட்டும் விபச்சார அழகிகள் நடமாடும் செய்தி அறிந்து கொதித்தெழுந்தது ஏன் ?

ஏழுமலையான் ஆலயம் இருக்கும் இடம் மட்டும் தான் புனித இடமா ? ஏழுமலையான் ஆலயத்திறகு வெளியில் உள்ள இடங்கள் புனித்துவம் வாய்ந்ததில்லையா ?

அவ்வாறெனில் இந்திய மண்ணை வணங்குகிறோம் எனும் வந்தே மாதரம் கோஷம் வெறும் வேஷம் தானா  ?

இந்திய மண்ணை வணங்குவதாக கூறுவது உண்மை என்றால் மண்ணின் எந்த மூளையில் விபச்சாரம் நடந்தாலும் பக்த கோடிகள் கொதித்தெழ வேண்டும் !

மண்ணை வணங்குவதாக கூறும் 'வந்தே மாதரம் கோஷம்' மாற்று மதத்தவர்களிடம் திணிப்பதற்காக மட்டும் தான் என்பதை மேல்படி சம்பவம் பட்டவர்த்தனமாக பறைசாற்றுவதாக அமைந்து விடும்.

தாய் மண்ணிலிருந்து விபச்சாரம் முற்றிலுமாக துடைத்தெறியப் படவேண்டுமென்றால் ?

புரட்டுங்கள் பெருமானாரின் வாழ்க்கைப் பக்கங்களை !

அகிலம் போற்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஏகஇறைவன் ஒருவனே என்ற பிரச்சாரத்தை மேற் கொள்ளும் முன் மக்கமா நகரம் விபச்சாரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தீமைகளால் சூழப்பட்டிருந்து.

இன்று சகோதரத்துவத்தையும், ஏகத்துவத்தையும் பறைசாற்றக்கூடிய புனித கஃபா அமைந்துள்ள மக்கா நகரம். அன்று தீமையின் பிறப்பிடமாகத் திகழ்ந்தது ஆண்கள், பெண்கள் நிர்வாணமாக இரண்டரக் கலந்து புனித ஆலயத்தை வலம் வந்தார்கள்.

அண்ணலார் அவர்களுடைய ஏகத்துவப் பிரச்சாரம் தீமையில் மூழ்கித் திளைத்திருந்த மக்களை சென்றடைந்தப் பின் அவர்களை தலைகீழாகப் புரட்டி எடுத்து மக்காவும், மதீனாவும் ஒழுக்கத்தின் பிறப்பிடமாக அறிவின் ஊற்றுக் கண்களாக மாறிக் கொண்டது.

நகரத்தில் புறையோடிப் போயிருந்த தீமைகளை களைவதற்கு பெருமானார் அவர்கள் மண்ணின் மைந்தர்களுக்கு ஓறிரைக் கொள்கையை விதைத்து  மனமாற்றத்தை ஏற்படுத்தினார்கள் அதனால் அவர்கள் சிறந்த சமுதாயமாக மாற்றப்பட்டார்கள் !

அண்ணலார் அவர்கள் அந்த மக்களிடத்தில் இறைநம்பிக்கையை ஊட்டுவதற்கு முன் அவர்களிடமும் இறைநம்பிக்கை இருந்தது, அவர்கள் நாஸ்திகர்களாக இருக்கவில்லை அது எவ்வாறான இறைநம்பிக்கை என்றால் ? இன்றை இந்திய பக்தகோடிகளிடம் இருப்பது போன்ற (பலதெய்வ ) இறைநம்பிக்கையாக இருந்தது.

இவர்களுக்கும், அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்
அவர்கள் உலகில் என்ன மாதிரியான மோசடியில் ஈடுபட்டு பொருளீட்டி சுகபோக வாழ்க்கையை அனுபவித்தாலும் அந்த குற்றத்திற்காக இறைவனிடத்தில் சிபாரிசு செய்து மன்னிப்பை பெற்றுத்தருவதற்கு மறைந்து சென்ற நல்லடியார்களும், இறைத்தூதர்களும் பொறுப்பேற்பார்கள் என்ற தவறான இறைநம்பிக்கை இருந்ததால் தாராளமாக தீமைகளை போட்டி போட்டுக் கொண்டு செய்து வந்தார்கள்.

இவர்கள் உலகில் என்ன மாதிரியான மோசடியில் ஈடுபட்டு பொருளீட்டி சுகபோக வாழ்க்கையை அனுபவித்தாலும் அந்த குற்றத்தை மறுபிறவியில் வேறொரு ஜீவராசிகளின் உருவில் பிறந்து பாவங்களைக் கழுவி தூய்மை படுத்திக் கொள்ளலாம் என்ற தவறான இறைநம்பிக்கை இருந்ததால் தாராளமாக தீமைகளை போட்டி போட்டுக் கொண்டு செய்து வந்தார்கள்.

•              இறைநம்பிக்கை இருந்தது,
•              தீமைகள் மாறவில்லை.

பெருமானார் அவர்கள் அந்த மக்களிடத்தில் பிரச்சாரப்பணியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் மக்களிடத்தில் தீமைகள் பலதை சுட்டிக்காட்டி இன்னவற்றை செய்யக்கூடாது மீறினால் இறைநம்பிக்கையாளனாக மாட்டான் என்றுக்கூறி முடிப்பார்கள். அதேப்போன்று நன்மையானவற்றை செய்யத் தூண்டும் காரியத்தைக் கூறி செயல்படுத்த வில்லை என்றால் இறைநம்பிக்கையாளனாக மாட்டான் என்றுக் கூறி முடிப்பார்கள்.

ஏகஇறைவன் ஒருவனே, அவரவர் குற்றத்திற்கு அவரவரே பொறுப்பாவார்; என்று சிந்திக்கத் தூண்டும் அறவுரைகளை அவர்களுடைய மனங்களில் ஆழமாக விதைத்ததால் அது நற்செயல்களை வளரச் செய்து தீமைகளை வேறோடு சாய்த்தது.

எந்தளவுக்கென்றால் ?

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்க மாட்டோம் என்றும், திருட மாட்டோம் என்றும், விபச்சாரம் புரிய மாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப் படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்லமாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு என நாங்களாகத் தீர்ப்பளித்துக் கொள்ள மாட்டோம்; (இறைவனிடமே ஒப்படைத்து விடுவோம்) என்றும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்தால் அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே உண்டு என்றும் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம்.

மக்கள் அணி அணியாக வந்து இறைத்தூதர் அவர்களிடத்தில் இனிவரும் காலங்களில் தீமைகளை செய்ய மாட்டோம் என்று மேற்கானும் விதம் பட்டியலிட்டுக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். .

'புதியதோர் உலகம் படைப்போம்' என்றுக் கூறி அதை ஏட்டளவில் எழுதி வைத்திருப்பவர்களைப் பார்த்து வருகிறோம். அதை செயலளவில் கொண்டு வந்து சரித்திரம் படைத்தவர்கள் உலகில பெருமானார்(ஸல்) அவர்களைத் தவிற வேரெவரும் இல்லை என்று அடித்துக் கூறமுடியும்.

எந்தளவுக்கு என்று சொன்னால் ? அவர்களில் ஒருசிலர் மேல்படி தீமைகளில் எதையாவது செய்து விட்டால் கூட அதைத் தாமே முன்வந்துக் கூறி இஸ்லாமிய குற்றவியல் தண்டனையைப் பெற்றுக் கொண்டு உலகில் தங்களை தூய்மை படுத்திக் கொண்ட வரலாறு அவர்களுக்கு உண்டு.

உலகம் தோன்றியது முதல் இன்று வரை இதுபோன்று மக்களுடைய மனங்களை தலைகீழாகப் புரட்டி அவர்களைக் கொண்டு புதியதோர் உலகு படைத்த சாதனை பெருமானாரைத் தவிற வேறு எந்த சரித்திர நாயகனுக்கும் இன்றுவரை கிடையாது.

காந்தி அடிகள் கூறுகிறார்.
இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தான், அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலகச்சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல 
- Young India, Quoted in The light, Lahore, for 16th Sep 1824. Mahatma Gandhi.

வரலாற்று ஆசிரியர் லாமர்டின் கூறுகிறார்:
சமயக் கொள்கை இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று, இறைவனின் ஒருமை, மற்றொன்று இறைவனின் ஸ்தூலப் பொருளற்ற தன்மை. முந்தியது இறைவன் என்றால் என்னவென்று உரைக்கின்றது. பிந்தியது இறைவன் என்னவாக இல்லை என்பதைத் தெரிவிக்கின்றது. ஒன்று தவறான கடவுள்களைத் தனது பலத்தால் தூக்கியெறிகின்றது. மற்றொன்று பிரச்சார துணையால் ஒரு புதிய கருத்தை உருவாக்க விழைகின்றது. தத்துவப் போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப்பூர்வமான கொள்கைகள், நம்பிக்கைகளை நிலைநாட்டியவர், மாயைகள் கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒருகொள்கை வழி நாகரிகத்தை உருவாக்கியளித்த மாமேதை ஒரே ஆன்மீக தலைமையின் பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர் தான் முஹம்மது (ஸல்) அவர்கள் 
---Lamartine, Historie de la Turquie, Paris 1854, vol II, pp. 2760277.

தேவஸ்தானம் மற்றுமல்லாமல் இந்திய மண்ணில் எந்த ஒரு இடத்திலும் விபச்சாரம் தலை தூக்காமல் இருக்க வேண்டுமெனில் பலதெய்வ நம்பிக்கையை துடைத்துதெறிந்து விட்டு ஓறிரை நம்பிக்கையை விதையுங்கள். மண்ணின் மைந்தர்களுடைய மனங்களில் மாற்றம் ஏற்படாதவரை மண்ணில் புரையோடிப் போயுள்ள தீமைகளை களையவே முடியாது .

இன்றும் இந்திய பாடப் புத்தகங்களில் பாரதியார் எழுதிய '' புதியதோர் உலகம் படைப்போம் கெட்டப் போரிடும் உலகத்தை வேறோடு சாய்ப்போம் '' என்றுக் கூறிய தத்துவத்தை பாடுவதோடு நிருத்திடாமல் புதியதோர் உலகு படைக்க புரட்சி மிக்க சமுதாயத்தை ஏகஇறைவன் ஒருவனே! என்ற அடிப்படையில் உருவாக்குங்கள்.

ஏகஇறைவன் ஒருவனை மட்டும் ஏற்றுக்கொண்டோம், திருட மாட்டோம், விபச்சாரம் செய்ய மாட்டோம், அநியாயமாக எவருடைய உயிரையும் கொலை செய்;ய மாட்டோம் என்று மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்துக் கொள்ளாதவரை இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் எந்த மூளையிலும் விபச்சாரம் கடவுள் ஆலயம் வரை நெருங்குவைதை எவராலும் தடுக்க முடியாது.

60:12. நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து ''அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்