.அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இறைவனின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்கள், இறைவனின் கூற்றுக்களை அவனுடைய வேதத்தில் கூறப்பட்டுள்ள விதம் ஏற்று அதன்படி இனிமையான இவ்வுலகில் இனிமையாக நடந்து கொள்ளவேண்டும் அவ்வாறெனில் உலகில் நிலவக்கூடிய குழப்பங்களிலிருந்து தன்னை தூரப் படுத்திக் கொள்ள முடியும். உலகில் நிலவும் குழப்பங்களில் மிகமோசமானது அண்ணியப் பெண்களிடமிருந்தேயாகும் ( விபச்சாரமாகும் ) அதுவும் நமக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரும் சமுதாயமாகிய பனூ இஸ்ரவேலர்கள் சமுதாயத்தில் புரையோடிப் போன பெரும் பெரும் குழப்பங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது விபச்சாரமாகும். என்பதை இறைவனின் இறுதித் தூதர் முஹம்மதுநபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
இறைவனின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்கள், இறைவனின் கூற்றுக்களை அவனுடைய வேதத்தில் கூறப்பட்டுள்ள விதம் ஏற்று அதன்படி இனிமையான இவ்வுலகில் இனிமையாக நடந்து கொள்ளவேண்டும் அவ்வாறெனில் உலகில் நிலவக்கூடிய குழப்பங்களிலிருந்து தன்னை தூரப் படுத்திக் கொள்ள முடியும். உலகில் நிலவும் குழப்பங்களில் மிகமோசமானது அண்ணியப் பெண்களிடமிருந்தேயாகும் ( விபச்சாரமாகும் ) அதுவும் நமக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரும் சமுதாயமாகிய பனூ இஸ்ரவேலர்கள் சமுதாயத்தில் புரையோடிப் போன பெரும் பெரும் குழப்பங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது விபச்சாரமாகும். என்பதை இறைவனின் இறுதித் தூதர் முஹம்மதுநபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நிச்சயமாக உலகம் இனிமையானதாகவும், செழிப்பானதாகவும் உள்ளது நிச்சயமாக அல்லாஹ் உங்களை அதில் தன் பிரதி நிதியாக்கயுள்ளான். நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று அவன் பார்க்கின்றான். ஆகவே உலகை (உலகின் ஏற்படும் குழப்பங்களை) அஞ்சிக்கொள்ளுங்கள். மேலும் பெண்களை (பெண்களினால் ஏற்படும் குழப்பங்களை) அஞ்சிக்கொள்ளுங்கள். ஏனெனில் பனூ இஸ்ராயீல் கூட்டத்தினரில் முதன் முதலாகத் தோன்றிய குழப்பம் பெண்கள் விஷயத்திலாகும். நூல் -முஸ்லிம்
ஊடகச் செய்தி தந்திரியிடம் 1 கோடி பறிக்க திட்டம் . சபரிமலை ஐயப்பன் கோயில் தலைமை தந்திரி கண்டரகு மோகனருவை பெண்ணுடன் ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் அழகி ஷோபா ஜான், அணில் குமார், விஜி ஆகிய மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர் . அவர்களிடம் தொடர்ந்து விசாரானை நடந்து வருகிறது. ஷோபா ஜானுக்கு வலது கரமாக செயல்பட்ட மலையாள நடிகர் பெச்சு ரகுமானை வலைவீசி தேடி வருகின்றனர். தினகரன் ஆகஸ்ட் 7
விபச்சாரம் செய்யும் முதியவர் என்று ஏன் தனித்து கூறப்பட்டதென்றால் ? ஒரு முதியவர் என்பவர் இளைஞர்களுக்கு முன்னோடியாவார் இந்தப் பழுத்த முதியப் பருவத்தில் இளசுகளுக்கு உபதேசம் செய்ய கடமைப்பட்டவராவார், நேர்வழி எது ? தீய வழி எது ? என்று கூற கடமைப்பட்ட ஒருவரே தீய வழியில் சுகமனுபவிக்கும் போது ( வேலியே பயிரை மேயும் போது சுற்றியுள்ள ஆடுகள் சும்மாயிருக்குமா ? ) இளைஞர்கள் என்ன செய்வார்கள் ? பார் பெருசுக்கு இந்த தள்ளாடும் வயதில் இது கேட்கிறதென்றால் நாம் என்ன அவரை விட குறைந்தவர்களா ? என்ற சிந்தனை மணதில் எழத் தொடங்கினால் இளைஞர்களால் குற்றச் செயல்கள் உலகில் மிகுந்து அதன் மூலம் மேலும் தீமைகள் தலைவிரித்தாடத தொடங்கும். அதனால் அல்லாஹ் மறுiமையில் விபச்சாம் செய்யும் முதியவரிடம் பேசவோ, அவரை தூய்மைப் படுத்தவோ, அருளுடன் பார்க்கவோ மாட்டான். என்று இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
இறைவனின் பிரதிநிதி என்று தன்னை கூறிக் கொள்ளக் கூடியவர்களாகிய பிரேமானந்தா, சங்கராச்சாரியார் வரிசையில் சுவாமி ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரகு மோகனருவும் விபச்சார வழக்கில் உட்படுத்தப்பட்டுள்ளார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அல்லாஹ் மறுமை நாளில் மூன்று மனிதர்களுடன் பேசவோ, அவர்களை தூய்மைப் படுத்தவோ , அவர்களை அருளுடன் பார்க்கவோ மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு. அவர்கள்: விபச்சாம் செய்யும் முதியவர், பொய்யுரைக்கும் அரசன், பெருமையடிக்கும் ஏழை.அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி) , நூல்: முஸ்லிம்.
ஒரு மனிதன் இறைவனை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சினால் உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற குழபங்களில் நமக்கு தெளிவை ஏற்படுத்துவான் எது தீய செயல் ? எது நல்ல செயல் என்று பிறித்தரியும் பக்குவத்தை ஏற்படுத்துவான் என்பதை மேற்கானும் குர்ஆனின் கூற்று உணர்த்துகிறது, ஆளுக்கொரு தெய்வம் குலத்துக்கொரு கோயில் ( தர்ஹா ) என்றிருந்தால் ஏக இறைவனின் மீதான முறையான அச்சம் மனிதனுக்கு ஏற்படாது, இறைவனின் முறையான அச்சம் மனிதனுக்கு ஏற்படாத வரை நல்லவை கெட்டவைகளை பிறித்தரியும் பக்குவமும் வராது அதனால் அவர் அர்ச்சகராக இருந்தாலும், சாமான்யனாக இருந்தாலும் தனது செல்வாக்கிற்கொப்ப விபச்சாரம் செய்வார். சாமானியன் ரோட்டோர குடிலில் சில்லரை காசுக்குப் போவான், மடாதிபதிகளும், தந்தரிரிகளும் லட்சங்களைக் கொடுத்து ஷோபாவின் அடுக்கு மாடிக் குடிலுக்குப் போய் விபச்சாரம் செய்வதுடன் புகைப்படமும் எடுத்துக் கொள்வார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்மூஃமின்களே ! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொண்டால் ( நன்மை தீமையை ) பிரித்தறியும் தன்மையை அவன் உங்களுக்கு ஆக்குவான் , உங்கள் பாவங்களை உங்களை விட்டும் போக்கி உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகத்தான அருட் கொடையுடையவன் - அல்குர்ஆன் - 8-29
இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவர்களது ஆட்சிகாலத்தில் வாழ்ந்த மக்களிடம் முறையான இறைச்சத்தை ஏற்படுத்தி பயபக்தியாளர்களாக வார்த்தெடுத்தார்கள் அதனால் தனிமையில் யாருக்கும் தெரியாமல் செய்த விபச்சாரக் குற்றம் அப்பெண்மணியிடம் இருந்த இறையச்சம் மனதை வெகுவாக பாதித்து குற்ற உணர்வை மேலோங்கச் செய்கிறது அதனால் அநனயை ஆட்சியாளராக இருந்த நபிகள் நாயகத்திடம் ஓடோடி வந்து தனது குற்றச் செயலைக் கூறி தண்டனையை நிறைவேற்றக் கோருகிறார்.
அவர் நினைத்திருந்தால் அக்குற்றத்திற்காக தனிமையில் இறைவனிடம் மன்றாடி விட்டு மீண்டும் அதுபோன்ற குற்றம் செய்யாமல் தன்னை தடுத்துக் கொண்டாலே போதுமானதாகும் இறைவன் ஏற்றுக் கொண்டிருப்பான். ஆனாலும் மறுஉலக வாழ்வில் இறைவன் தன்னை அருள் கொண்டு பார்க்க வேண்டும் என்றெண்ணி தனது பாவத்திற்கு உலகிலேயே தண்டனை பெற்று தன்னை தூய்மை படுத்திக் கொள்ள முன்வருகிறார் என்றால் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை ஏளனம் செய்பவர்கள் சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர். இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய ஏகத்துவ பிரச்சாரம் மூலம் எவ்வாறான மக்களை வார்த்தெடுத்தார்கள் என்பதை உலகம் உற்று நோக்க வேண்டும்.
இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆட்சி காலத்தில் ஓர்நாள்அபூ நுஜய்து இம்ரான் பின் ஹூஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்ஜூஹைனிய்யா கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண்மனி விபச்சாரத்தில் ஈடுபட்டதின் காரணமாக கர்ப்பினியாகி விட்டார். அப்பெண்மனி அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் சமூகம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே ! நான் ஹத்து எனும் கடும் தண்டனைக்குரிய குற்றத்தை ( விபச்சாரத்தை ) செய்து விட்டேன். என் மீது தண்டiயை நிறைவேற்றுங்கள் என்று கூறினார். அப்பெண் கர்ப்பிணியாக இருந்ததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் நெருங்கிய உறவினரை அழைத்து இப்பெண்ணுக்கு குழந்தைப பெற்றெடுக்கும் வரை உதவி செய்வீராக ! இப்பெண்மனி குழந்தையைப் பெற்றெடுத்ததும் என்னிடம் வருவீராக ! எனக் கூறினார்கள். அவரும் அதேப்போன்று செய்தார் குழந்தைப பெற்றதும் அப்பெண்மணி அண்ணலார் அவர்களிடம் வந்து எனது தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றுக் கூறினார் (அதனைத்தொடர்ந்து) அப்பெண்ணிற்குரிய தண்டனையை நிறைவேற்றப்பட்டு அண்ணலார் அப்பெண்மனிக்கு ஜனாஸா தொழுகை தொழ வைத்தார்கள். அப்பொழுது உமர் ( ரலி ) அவர்கள் அண்ணலாரிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே ! இப்பெண்மனிக்குத் தொழ வைக்கிறீர்களா ? இப்பெண்மனி விபச்சாரம் செய்தவராயிற்றே ! எனக்கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல் ) அவர்கள் அந்தப்பெண்மனி மாபெரும் தவ்பா செய்துவிட்டார். எத்தகைய தவ்பா என்றால், அந்த தவ்பாவை மதீனா வாசிகளில் எழுபதுபேர்களுக்கு பங்கிடப்பட்டாலும் விஸ்தீரணமானதாக இருக்கும் அப்பெண்மனி தனது ஆன்மாவை அல்லாஹ்வுக்காக பரிசுத்தப் படுத்தியதை விட சிறந்த அமலை நீர் பெற்றுக் கொள்வீரா ? என்றார்கள் நூல் - முஸ்லிம்
இஸ்லாமிய குற்றவியல் சட்டம் தேவை
இஸ்லாமிய குற்றவியல் சட்டம் உலகில் உள்ள அனைத்து நாடுகளிம் நடைமுறை படுத்தப்படாதவரை ( இன்று பல இஸ்லாமிய நாடுகளிலும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது ) எந்த நாட்டிலும் விபச்சாரத்தை ஒழிக்கவே முடியாது என்பதற்கு தமிழகத்தின் ஹிந்து மக்களின் தலைமை பீடமாகிய சங்கர மடத்தின் சங்கராச்சாரியாரை அடுத்து தென்னிந்திய ஹிந்து மக்களின் தலைமை தெய்வமாக கருதப்படும் ஐயப்பன் கோயில் தலைமை தந்திரியின் ஷோபாவுடனான சல்லாபமும் அதன் புகைப்பட நகல்களும் பெரிய எடுத்துக் காட்டுகளாகும். அதுபோல் ஒன்றும் நடக்கவில்லை என்பது போல் அப்பாவி மக்களுக்கு படம் காட்டி விட்டு சங்கரர்சசார்யார் போன்று இவரும் வெளியில் வந்து மீண்டும் தனது பழைய பதவிக்கே திரும்பி விடுவார். அவருடன் பிடிபடட்ட விபச்சாரகர்களும் திரும்பி வந்து பழைய ஆபாச தொழிலை ? முன்னைக் காட்டிலும் முனைப்புடன் செய்வார்கள்.
வேதத்தை ஒருசாரார் மட்டுமே அதுவும் வழக்கொழிந்துபோன சமஸ்கிருத மொழியில் மட்டுமே ஓதவேண்டும் பிறர் ஓதக்கூடாது ஓதினால் பாவம் என்றெல்லாம் கூறி மறைத்து வைத்துக் கொண்டதால்; விபச்சாரம் செய்தால் என்னக் குற்றம் என்று வேதத்தில் இறைவன் சொல்வது பொது மக்களுக்கு தெரியாமல் போனதால் விபச்சாரம் போன்ற கொடிய குற்றங்கள் பரவத் தொடங்கிறறு, விபச்சாரம் செய்தால் என்னக் குற்றம் என்று இ.பி.கோ சட்டம் கூறுவது மட்டுமே தெரிந்து வைத்திருந்ததால் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்க வேண்டியவர்களை கவனித்து விட்டால் இ.பி.கோ சட்டத்தின் பிடியிலிருந்து வெளியில் வரும் கலையையும் குற்றவாளிகள் படித்துக் கொண்டார்கள் அதனால் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து விட்டு வெளியில் வருவதுடன் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கப் பட்டவர்களுடைய ஆசியுடன் முன்னைக் காட்டிலும் முனைப்புடன் அரங்கேற்றுவார்கள்
வேத்தை முறையாகப படித்தும் இறைவனை முறையாக அஞ்சாமல் விபச்சாரத்தை அரங்கேற்றுபவர்களை எப்படி ஒடுக்குவது அல்லாஹ் கூறுகிறான்: விபச்சாரியும், விபச்சாரனும் அவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். 24:2 .விபச்சாரத்தின் விபரீதங்களை உணர்வதற்காகவும், விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது எயிட்ஸ் நோயைப் பரப்புவதற்காக இன்பம் அனுபவித்த அனைத்து உறுப்புகளும் தண்டிக்கப் பட வேண்டும் என்பதற்காகவும் நூறு கசையடி அடியுங்கள்; என்றும் இத்தண்டனையின் மூலம் பிறரும் படிப்பினைப்பெற வேண்டும் என்பதற்காக இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். என்றுக் கூறி அத்தண்டனையை பொது மக்களுக்கு முன்னிலையில் வழங்குமாறு அல்லாஹ் கூறுகிறான்.
ஊடகங்களின் பங்களிப்பு
ஊடகங்களின் பங்களிப்புசமுதாய சீர்திருத்தத்திற்காகவும், அதன் முன்னேற்றத்திற்காகவும் பெரிதும் உழைக்கக் கூடியவைகளில் பல தொண்டு நிருவணங்களை விட முதலிடம் வகிப்பது ஊடகங்களேயாகும் உலகில் பலநாடுகளில் சர்வாதிகார ஆட்சியாளர்களை கம்பி எண்ணச் செய்ததும், பல ஆட்சிகளை கவிழ்த்து விட்டு வேறொரு ஆட்சி மலர வழிகோலியவைகள் ஊடகங்களேயாகும் அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஊடகங்கள் இன்று விபச்சாரம் போன்ற குற்றச் செய்லில் ஈடுபடுபவர்களுக்கு அழகிகள் என்றும் செக்ஸ் தொழிலாரளர்கள் என்றும் சிறப்பு பெயர்கள் இட்டு கௌரவப் படுத்துவதால் அவைகள் அவர்களுக்கு ஊக்கமளிக்க ஏதுவாக அமைந்து விடுகிறது.
இதே ஊடகங்கள் திருடுபவர்களை வழிப்பறி தொழிலாளிகள் என்று கூறுவதில்லை குண்டு வைப்பவர்களை குண்டு வெடி தொழிலாளிகள் என்று கூறுவதில்லை. அற்ப சுகத்திற்காகவும், அற்ப கிரயத்திற்காகவும் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சாதி - மத பேதமின்றி சீரழிக்கும் கொடிய நோயை பரப்புபவர்களை விபச்சாரி என்றோ, விபச்சாரன் என்றோ ஊடகங்கள் ஏன் அழைப்பதில்லை ? அவ்வாறான சிறப்புப் பெயர்கள் இட்டு எழுதுவதிலும் ஒரு உள் நோக்கம் இருக்கவேச் செய்கின்ன !
பெரும்பாலான ஊடகங்கள் செக்ஸ் செய்திகளை மூலதனமாக் கொண்டே பத்திரிக்கை நடத்துகிறார்கள் விபச்சாரத்தை ஊக்குவித்து செக்ஸ் செய்திகளை கொட்டிக் குவிக்கும் விபச்சாரகர்களையும், விபச்சாரத்தை ஊக்குவிப்பவர்களையும் கேவலமாக எழுதினால் ? கடுமையாக சாடினால் ? அவர்கள் தங்களது செக்ஸ் தொழிலை நிருத்தி விட்டால் பலநூறு பத்திரிக்கைகள் இழுத்து மூடப்படும் என்பதால் விபச்சாரகர்களுக்கும், விபச்சாரத்தை ஊக்குவிப்பவர்களுக்கும் சிறப்புபு; பெயர்கள் சூட்டி பத்திரிக்கைகளால் கௌரவப் படுத்தப் படுகிறது . அதனால் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கையைப் புரட்டினால் மேல்படி செய்திகள் இல்லாத பத்திரிக்கை இல்லை என்று சொல்லலாம்.
·
·
- நடிகை நமீதா ' பாய் பிரண்டுடன் ' வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு கொடுத்தார்.·
- பிஷப் ஆனந்தராஜ் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ·
- மனைவியை கடத்தியதாக சினிமா டைரக்டர் மீது புகார்
- நடிகையுடன் உல்லாசமாக இருந்ததை காட்டி பிரபல நடிகரிடம் பணம் பறிப்பு . தினத்தந்தி 08-08-2006
மேற்கானும் செய்திகள் இன்று 08-08-2006அன்றைய ஒரே நாள் செய்தி செய்தியாகும். இந்த நான்கு செய்தியும் சினிமா வட்டாரத்தைச் சார்ந்ததாகும் இவ்வாறாக அவர்களது ஊடகம் அவர்களை மையமாக வைத்து தொழில் நடத்துகிறார்கள். ஆனால் இஸ்லாம் அவர்களை ஒருபோதும் கௌரவப் படுத்தியது கிடையாது விபச்சாரியும், விபச்சாரனும் என்றே கூறும். விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவiளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது. 24:3.
முறையான இறைச்சத்தை ஏற்படுத்தக் கூடிய இஸ்லாமிய ஆட்சி உலகில் நிலை நிருத்தப்பட்டால் ஷோபா ஜான், அணில் குமார், விஜி போன்றவர்கள் உருவாகவே மாட்டார்கள். இந்த விபச்சாரகர்கள் போன்றோரால் சங்கராச்சாரியார், தந்திரி கண்டரகு மோகனரு போன்றவர்களும் பாதிக்கப் பட மாட்டார்கள்.
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கிறது. மேலும் அது (மனித குலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்) வழி மிகக் கெட்டதாகும் அல்குர்ஆன்: 17- 32
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்