வியாழன், செப்டம்பர் 15, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

மக்ஸூமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடியபோது தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக உசாமா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பரிந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்களின் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள், உயர்ந்தவர்களை விட்டு விடுவார்கள். அதனால் தான் அவர்கள் அழிந்து போயினர். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! என் புதல்வி ஃபாத்திமாவே இந்தக் குற்றத்தைச் செய்திருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன் என்று இறைத்துதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்தார். ஆதார நூல்: புகாரி 6787


அர்ச்சகர் தேவநாதனின் லீலைகள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....



செல்வாக்கு மிக்கவர்கள் துணிந்து குற்றச்செயல்களில ஈடுபடுவதும்; அதில் மாட்டிக் கொண்டால் தண்டனையிலிருந்து தப்பித்து கொள்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு மிகவும் நெருக்கமான திண்ணைத் தோழர், பள்ளித் தோழர், நெருங்கிய உறவினர் யாரென்று வலைவீசித் தேடி அவர் மூலமாக சிபாரிசு அனுப்பி முடிந்தளவு தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு முயற்சி செய்கின்றனர். ( ஊடகத்தின் கவனத்திற்கு சென்ற ஒன்றிரண்டு மட்டுமே விதிவிலக்கு ). 

மேல்படி அதிகாரியும் தன்னை விட முக்கியமான ஒருவர் அல்லது தனக்கு நெருக்கமான உறவுக்காரர் ஒருவர் தன்னிடம் சிபாரிசுக்கு வந்து விட்டால் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மிகப்பெரிய கிரிமினலையும் கூட தண்டனையிலிருந்து தப்ப வைத்து விடுவார்.

பணம் கூட அடுத்த நிலை, சிபாரிசே முதல் நிலை எனும் அளவுக்கு அரசு அதிகாரிகளுடைய நிலை கீழானதாக மாறி ஸ்காட்லான்டு போலீஸூக்கு நிகரான நமது போலீஸின் இமேஜ் சரிந்து கொண்டிருக்கிறதைப் பார்க்கின்றோம்.
 
இது இன்று மட்டும் நடக்கும் சமாச்சாரமல்ல மாறாக அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருந்து வந்த ஒன்றாகும் இந்த தீமையையும் அண்ணல் அவர்கள் ஆட்சி செய்த காலத்திலேயே துடைத்தெறிந்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் அரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் உயர்ந்த மக்ஸூம் குலத்தை சேர்ந்த பெண்மனி திருட்டில் ஈடுபட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்கு வந்தது.

தண்டனை வழங்கப்படவிருந்த அப்பெண் நல்லப் பாரம்பரியத்திலிருந்து வந்தவரும், உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவருமாவார்.

அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் அவரது பாரம்பரியமிக்க குடும்பத்தவர்ளும், அவரது உயரந்த குலத்தைச் சேர்நதவர்களும் கேவலப்பட்டு தலை குணியும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதால் முன்கூட்டியே மேல்படி தண்டனையியிலிருந்து விடுவிப்பதற்காக ஆட்சித் தலைவராகிய அண்ணல் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவரை தேடும் பணியில் அப்பெண்ணின் குலத்தைச் சேர்ந்த முக்கிமானவர்கள் ஈடுபட்டனர்.

அண்ணல் அவர்களிடம் வளர்ந்து அவர்களின் அன்பிற்கு பாத்திரமான உசாமாவே அதற்கு மிகவும் தகுதியானவர் எனும் முடிவுக்கு வந்தார்கள்.

உசாமா(ரலி) அவர்களை அணுகி குலப்பெருமையயை காப்பாற்றுவதற்காக அப்பெண்ணின் தண்டனையை ரத்து செய்ய அண்ணல் அவர்களிடம் பரிந்துரை செய்யும் படி கேட்டுக் கொண்டனர்.

இதற்கு இணக்கம் தெரிவித்த உசாமா(ரலி) அவர்கள் அண்ணல் அவர்களை அணுகி உயர்குலத்தைச் சேர்ந்த அப்பெண்ணின் தண்டனையை ரத்து செய்து விடும்படி கோரிக்கை வைத்ததும் இதை உசாமாவின் வாயிலிருந்து செவியுற்ற அண்ணல் அவர்கள் அவரின் மீது கடும் கோபம் கொண்டு உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் அழிந்து போனதற்கு இது தான் காரணம் என் மகள் இக் குற்றத்தைச் செய்திருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டிப்பேன் என்றுக்கூறி காலதாமதம் செய்யாமல் சிபாரிசு செய்த உசாமா முன்னிலையிலேயே குற்றவாளிக்குரிய தண்டனையை நிறைவேற்றி சிபாரிசை முளையிலேயே கிள்ளி எறிந்தார்கள்.

இதன் காரணத்தினால் அவர்கள் ஆட்சி செய்த காலத்திலும், அவர்கள் காட்டித் தந்த வழியில் ஆட்சி செய்த காலம் வரையிலும் எவரும் எவருக்காகவும் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி அல்லது ஆட்சியாளருக்கு நெருக்கமானவரை தேடிப்பிடித்து அதிகாரிகளை சந்தித்து சிபாரிசு செய்ய செல்லவுமில்லை.

குடும்ப கௌரவமும், குலப்பெருமையும் தன் ஒருவரின் ஈனச்செயலால் காற்றில் பறந்து விடும் என்றுக் கருதி எவரும் துணிந்து குற்றச் செயலில் ஈடுபடவும் முன் வரவில்லை.

அரபு நாடுகளுக்கு தங்களின் பின்ளைகளை வேலைக்கு அனுப்பும் பொழுது கீழே கிடக்கும் ஒருப் பொருளைக் கூட குணிந்து எடுத்து விடாதே கையை வெட்டி விடுவார்கள் என்ற உபதேசம் மறவாமல் செய்வார்கள் அந்தளவுக்கு உலகின் மூளை, முடுக்கு, பட்டி, தொட்டிகளிலெல்லாம் பிரபலமாகிப் போயிருந்தது அரபு நாட்டின் குற்றவியல் தண்டனை.

ஆட்சியாளர்கள் நம்முடைய ஆட்கள் என்ற தைரியத்தில் அரசியல் பிரமுகர்களின் செல்வாக்குப்பெற்ற ஜெயேந்திரர் அவர்கள் சில வருடங்களுக்கு முன் சங்கரமடத்தில் துணிந்து ஒருக் கொலையும் செய்து பெண் புரோக்கர்கள் மூலமாக விருப்பப்பட்ட பிரபல பெண்களை அழைத்து வந்து பெரும்பான்மை ஹிந்துக்களால் மதிக்கப்படுகின்ற சங்கர மடத்திற்குள் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டார்.

இன்று அவரது ஸ்டைலில் அதே காஞ்சிபுரத்தில் கோயில்  கருவறையில் வைத்துப் பல பெண்களுடன் உல்லாசத்தில் ஈடுபடத் துணிந்தார் அர்ச்சகர் தேவநாதன். இதில் தான் மட்டும் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக பல குடும்பப் பெண்களை வளைத்துப் போட்டு அவர்களை சில அரசியல் பிரமுகர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தார். ஜெயேந்திரருக்கு அன்றே அவரது குற்றத்திற்கு தகுந்தாற்போல் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் இன்று தேவநாதன் அதே மாதிரியான வழியில் குற்றம் செய்ய பயந்திருப்பார்.

உயர் குலத்தைச் சேர்ந்தவர் ஜெயேந்திரர் என்பதால் ஒன்றிரண்டு முறை மட்டும் கண்துடைப்புக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து பிறகு விட்டு விட்டதால் அவரைப் போன்ற மதகுருமார்கள், மத போதகர்கள், அர்ச்சகர்கள் அவரது வழியில் அப்பாவி பக்தர்களையும், பக்தைகளும் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை மிஸ் யூஸ் பண்ணுகின்றனர்.

இதற்கு தீர்வு தான் என்ன ?

இரண்டு பேர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், (நபியே!) அல்லாஹ்வின் சட்டப்படி எங்களிடையே தீர்ப்பளியுங்கள் என்றார். அவரைவிட விளக்கமுடையவராயிருந்த மற்றவர், ஆம், இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள் என்று கூறினார். பின்னர் கிராமவாசியான முதல் நபர் என்னைப் பேச அனுமதியுங்கள் என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், பேசுங்கள் என்றார்கள். அவர், என் மகன் இதோ இவரிடம் கூலிக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் மக்கள் கூறினர். நான் இந்த தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக அதற்கு பதில் நூறு ஆடுகளையும், என்னுடைய அடிமைப் பெண்ணையும், பிணைத் தொகையையும் வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்தபோது என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்படவேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தனர் என்றார். 

இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் உயிர்  எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன் உம்முடைய ஆடுகளும், உம்முடைய அடிமைப் பெண்ணும், பிணைத்தொகையும் நீர் திரும்பப் பெற வேண்டும் என்று கூறிவிட்டு, அவரின் மகனுக்கு (திருமணமாகாததால்) நூறு கசையடிகள் வழங்கி, ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தினார்கள். அருகிலிருந்த உனைஸ் அல்அஸ்லமீ(ரலி) அவர்களிடம் அவனுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட மற்றொரு மனிதரின் மனைவியிடம் சென்று அவள் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்! என்று கூறினார்கள். அவள் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதும் அவளுக்கு உனைஸ்(ரலி) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்கள். அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: நூல்: புகாரி 6842, 6843.

விபச்சாரத்தில் ஈடுபடும் இருவரில் ஒருவரை ரகசியமாக விசாரிப்பதும், மற்றொருவரை பகிரங்கமாக விசாரிப்பதும், ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதும், மற்றொருவரை ரகசியமாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதும்,

ஒருவரை அவருடைய பெயருடன் பத்திரிகைகளில் குறிப்பிடுவதும், இன்னொருவருடையப் பெயரை (மாற்றம் செய்யப்பட்டுள்ளது ) என்று மாற்றி எழுதுவதும் குற்றங்கள் செய்வதற்கு இன்னும் தூண்டுதலாக அமையும் என்பதை சிந்திக்க வேண்டும்.

விபச்சாரத்தில் ஈடுபடும் இருவரிடமும் சமமான அணுகுமுறையும், சமமான தண்டனையும் வழங்கப்படாதவரை குற்றங்களை குறைக்கவே முடியாது.

மதகுருமார்கள், மதபோதகர்கள் (ஹிந்து, கிருஸ்தவ, முஸ்லீம்) மீதான அளவு கடந்த மரியாதையை மக்கள் தவிர்க்க வேண்டும், சாதாரண மனிதர்களின் மீது வைக்கும் மரியாதையே அவர்கள் மீதும் செலுத்தப்பட வேண்டும்.

முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய நபிமார்களை பின்பற்றியவர்களை சீடர்கள், சிஷ்யர்கள் என்றும் அழைப்பட்டனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின் பற்றியவர்களை மட்டுமே தோழர்கள் என்றழைக்கப்பட்டு மஹான்களும் மக்களும் சமமானவர்கள் இறைவன் மட்டுமே தனித்து விளங்குபவன் என்ற நிலைப்பாட்டை முஹம்மது (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்.

எனக்காக எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டாம் என்று தனி மரியாதையை தடை செய்தார்கள், மர்யமின் மகன் ஈஸாவை (ஏசுவை) அவர்களது சமுதாயம் அளவு கடந்து புகழ்ந்;ததைப் போன்று என்னைப் புகழ வேண்டாம் என்றும் தனி மனித துதிப் பாடுதலைப் தடை செய்தார்கள்.

இதனால் நபிகள் நாயகத்தின் மீது மக்களுக்கு பாசமும், அன்பும் ஏற்பட்டது பக்தி ஏற்படவில்லை. அதனால் மதகுருமார்களிடம் முஸ்லிம்கள் அதிகம் ஏமாறுவதில்லை (ஏமாறுபவர்கள் நபிகள் நாயகத்தின் வரலாறு தெரியாதவர்கள் ஒன்றிரண்டுப் பேர் இருக்கலாம். )

மதகுருமார்கள், மற்றும் மதபோதகர்கள் மக்களிடத்தில் தங்களை தனிப்பட்ட முறையில் காட்டிக் கொள்வதற்காக அணியும் விஷேச யூனிஃபாமை அரசு தடை செய்ய வேண்டும். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் இறைவன் புறத்திலிருந்து எதோ ஒரு விஷேசத் தன்மை வழங்கப்படுவது போல் அப்பாவி மக்கள் நம்புவதற்கு அவர்களது யூனிஃபாமும் ஒருக் காரணமாகிறது. இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மக்களுடன் அமர்ந்திருக்கும் பொழுது இதில் யார் இறைத்தூதுர் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு சாதாரண மக்களைப் போன்றே அவர்களும் உடை அணிந்து இருப்பார்கள்.

பிரசாதத்தையும், உண்டியலில் காணிக்கை செலுத்துவதையும் அரசு தடை செய்ய வேண்டும். யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் இறைவனிடம் தனித்து தனது தேவையை கேட்கலாம் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் உள்ள இடைத் தரகர்களுக்கு ( அர்ச்சகர்களுக்கு ) கடவுள் தன்மை இருப்பது போல அப்பாவி மக்கள் நம்பி மோசம் போவதற்கு இடைத் தரகர்கள் (அர்ச்சகர்கள்) காரணமாகின்றனர். ( சிரமத்துடனும், மனக்கவலையுடனும் வரும் பெண்களையே அதிகம் வளைத்துப் போட்டதாக தேவநாதன் கூறியது ஆதாரமாகும் )

உயர்ந்த குலம், தாழ்ந்த குலம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல், எவரது சிபரிசுகளும் ஏற்கப்படாமல் குற்றவியல் தண்டனையை பாரபட்சமின்றி பொதுமக்கள் முன்னிலையில் வைத்து நிறைவேற்ற வேண்டும். போலீஸ் அதிகாரி வெற்றி வேல் அவர்;களை நட்ட நடுரோட்டில் கர்ண கொடூரமாக வெட்டி சாய்த்து ரெத்த வெள்ளத்தில் மிதக்க விட்டதை தொலைகாட்சியில் கண்ட அனைவருக்கும் மனம் துடியாய் துடித்தது இதைப்பார்த்த அவரது குடும்பத்தார் எத்தனை வேதனைப் பட்டிருப்பர் இவருடைய கொலையாளிகளை கண்டுப் பிடித்தப் பின்னர் அவர்களுக்கு ஒரு ஐந்தாண்டோ> பத்தாண்டோ சிறையில் அடைக்கப்பட்டு சுகாதாரமான> நீரும் உணவும் கொடுப்பதால் இதுப் போன்ற ஈவிறக்கமற்ற கொலைகாரர்கள் குறைவார்களா ? வளர்வார்களா  கொலைகாரர்கள் கண்டு பிடிக்கப்பட்டப்பின் அதே இடத்திற்கு கொண்டு சென்று பொதுமக்கள் முன்னிலையில் நிருத்தி அரசு அவர்களை வெட்டி சாய்த்து ரெத்த வெள்ளத்தில் மிதக்க விடாதவரை இதுப் போன்ற ஈவிறக்கமற்ற கொலைகாரர்கள் வளர்வதை தடுக்க முடியாது.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

மேலும், நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு  ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து தடுப்பபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்